• May 16 2026

பிக்பாஸ் மணியின் புழுதி கிளப்பும் தாறுமாறான வீடியோ.. பிக்பாஸ் பேமெண்ட் வந்துருச்சா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் மணி புதிய கார் வாங்கி புழுதி பறக்க அந்த காரை ஓட்டும் தாறுமாறான வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் பிக் பாஸ் பேமண்ட் வந்திருச்சா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் மணி என்பதும் இவர் தனது காதலி ரவீனாவுடன் கூட்டு வைத்துக் கொண்டு விளையாடினார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் இறுதி போட்டி வரை சென்று மக்களின் அமோக ஆதரவை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மணி இரண்டாவது இடம் பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் முடிந்த கையோடு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வரும் மணி, தற்போது ஒரு புதிய காரை வாங்கி உள்ளார். அந்த காரை அவர் டெலிவரி எடுத்த கையோடு கரடு முரடான மலைப்பாதையில் புழுதிபறக்க ஓட்டிச் சென்ற வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு பிக் பாஸ் பேமண்ட் வந்திருச்சா என்றும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். 

பிக் பாஸ் மணி மகேந்திரா தார் என்ற வகை காரை வாங்கி உள்ள நிலையில் அந்த நிறுவனமும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.



Advertisement

Advertisement