• May 15 2026

நடிகையாக இருப்பது அவ்வளவு ஈஸி இல்லை..- தனது காஸ்ட்லி லைஃப் ஸ்டைல் பற்றி நிதி அகர்வால்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்திய பேட்டியில் நடிகை நிதி அகர்வால் பகிர்ந்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தனது வாழ்க்கை முறையும், தொழில்முறை தேவைகளும் குறித்து அவர் வெளிப்படையாக பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


அவர் கூறுகையில், மாதந்தோறும் ட்ராவல், தங்குதல், டயட், ஜிம், தனிப்பட்ட ட்ரெயினர், பார்லர் போன்ற செலவுகள் மட்டும் சேர்த்து சுமார் ரூ.5 லட்சம் வரை ஆகும் என தெரிவித்தார். நடிகையாக தன்னை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த செலவுகள் தவிர்க்க முடியாதவை என்றும் அவர் விளக்கினார். உடல் ஆரோக்கியம், தோற்றம் மற்றும் ஃபிட்னஸ் ஆகியவை தன்னுடைய தொழிலில் மிகவும் முக்கியமானவை என்பதால், அவற்றில் சலுகை செய்ய முடியாது எனவும் கூறினார்.

மேலும், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது மேக்கப், உடை, ஹேர் ஸ்டைலிங், போட்டோஷூட் உள்ளிட்டவற்றிற்கே சுமார் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்றும் அவர் பகிர்ந்தார். சில சமயங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த செலவுகளை ஏற்கின்றனர். ஆனால் பல நேரங்களில் இந்த செலவுகளை தானே ஏற்க வேண்டிய சூழலும் இருப்பதாக நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள், திரைப்பட நடிகைகளின் பின்னணியில் இருக்கும் வாழ்க்கைச் செலவுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.


Advertisement

Advertisement