• Jun 14 2026

விஷாலின் 'மகுடம்' இறுதிக்கட்டத்தில்.! இணையத்தை கலக்கும் போட்டோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக விஷால் அறிவித்துள்ளார். இயக்குநர் ரவி அரசு விலகிய பிறகு, விஷாலே இயக்கம் மற்றும் நடிப்பு என இரட்டைப் பொறுப்பை ஏற்று படத்தை முன்னெடுத்து வருவது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கிநாடாவில் நடைபெற்ற கடினமான இரு வார படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்  விஷால். படக்குழுவுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்த அவர், அனைவரும் சென்னை திரும்பியதாக குறிப்பிட்டார்.


அந்த நேரத்தில் ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஜம், நடன அமைப்பாளர் பிரிந்தா மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பை விஷால் பாராட்டினார். 

மேலும் இந்த படத்தில் எல்லா சூழ்நிலையிலும் கடுமையாக உழைத்த பெண் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். உடல்நலம் சரியில்லாத நேரத்திலும் துணையாக இருந்த சாய் தன்ஷிகாவுக்கும் அவர் நன்றியை பகிர்ந்தார்.

Advertisement

Advertisement