• May 15 2026

ஓட்டு பெட்டி வர இடத்தில கூட நம்ம தளபதி என்ட்ரி தான்.! ஸ்ட்ராங் ரூமில் நடந்த கைது

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு விதி மீறல் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்களின் படி, அங்கு சி.சி.டி.வி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழில்நுட்ப பணியாளர் யுவராஜ், கட்டுப்பாட்டு அறையில் இருந்த மடிக்கணினியை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 

அதில், இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை அவர் சட்டவிரோதமாக பார்த்ததோடு, அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்த சம்பவம், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் எடுத்த புகைப்படங்கள் வெளியில் பரவியதை தொடர்ந்து, இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பாதுகாப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்னும் சென்சார் சிக்கலில் உள்ள நிலையில், அதன் காட்சிகள் வெளியானது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement