• Apr 17 2026

எனக்கு திருமணம் நடந்தது உண்மைதான்: புதிய வீடியோவை வெளியிட்ட பாலாஜி முருகதாஸ்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸுக்கு நேற்று திருமணம் நடந்ததாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட நிலையில் திடீரென இன்று திருமண வீடியோவை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் தனது சக போட்டியாளர் ஷிவானி நாராயணனை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென்று அவர் நேற்று திருமண புகைப்படத்தை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த புகைப்படம் ஏப்ரல் 1, முட்டாள் தின பதிவாக இருக்கலாம் என்றும் அல்லது ஏதேனும் திரைப்பட படப்பிடிப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் இன்று திருமண வீடியோவை வெளியிட்டுள்ளார். நேற்று அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மணப்பெண் முகம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோவில் மணப்பெண் சிரிப்புடன் இருப்பதும் அந்த பெண்ணுக்கு பாலாஜி முருகதாஸ் தாலி கட்ட தயாராக இருப்பது போன்ற காட்சியும் உள்ளது. 

இதனை அடுத்து உண்மையாகவே பாலாஜி முருகதாஸ் திருமணம் நடந்து விட்டதா என்று கூறப்பட்ட நிலையில், பாலாஜி அந்த பதிவின் கீழே எல்லோருடைய வேண்டுகோளுக்கு இணங்க இந்த திருமண வீடியோவை வெளியிட்டு உள்ளேன் என்று கூறியதோடு இது ஏப்ரல் 1 மற்றும் விளம்பர படப்பிடிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்து அனேகமாக ஷிவானி நாராயணன் நிம்மதி அடைந்திருப்பார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் களை பதிவு செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement