• May 16 2026

அட்லியின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் இல்லையா? விஜய்யும் இல்லை.. என்ன செய்ய போகிறார்?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் 'புஷ்பா 2’ படத்தை முடித்தவுடன் இயக்குநர் த்ரிவிக்ரம் படத்திற்கு செல்ல போகிறார் என்றும் அட்லி படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி அதன் பிறகு ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அட்லி நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்றும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதை விவாதம் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ’புஷ்பா 2’ படத்தை முடித்தவுடன் அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அட்லியை வெயிட் பண்ண சொன்னதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே விஜய்யின் 69வது படத்தை எச் வினோத் இயக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால் அட்லியின் அடுத்த படத்தில் விஜய்யும் இல்லை, அல்லு அர்ஜுனும் இல்லை என்பதால் அவருடைய படத்தின் அடுத்த ஹீரோ யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement