• Aug 02 2025

டிஆர்பி ரேஸில் உச்சம் தொட்ட எதிர்நீச்சல் 2 ; ரசிகர்கள் மகிழ்ச்சி..!

luxshi / 17 hours ago

Advertisement

Listen News!

திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியல், டிஆர்பி ரேட்டிங்கில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல், இரண்டாண்டுகள் வெற்றிகரமாக ஓடிய பிறகு 2024இல் முடிவடைந்தது. 

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் சீசன் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ எனும் பெயரில் தொடங்கப்பட்டது.

இந்த சீசனில் முன்னாள் கதாநாயகி மதுமிதா விலகியதையடுத்து, புதிய ஜனனியாக பார்வதி நடித்து வருகிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களை அதே நடிகர்கள் தொடர்ச்சியாகவே நடித்துவருகின்றனர்.

தொடக்கத்தில் எதிர்பார்த்தளவுக்கு வரவேற்பு இல்லையென கூறப்பட்டாலும், சமீபத்திய வாரங்களில் இந்த சீரியல் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. 


குறிப்பாக, கதையில் தர்ஷனின் திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திருப்பங்கள் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளன.

இதனால் எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் வார வாரம் ஜெட் வேகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த மாதத்தில் இருந்தே டிஆர்பியில் பிக் அப் ஆக தொடங்கியது. 

குறிப்பாக கடந்த மாத தொடக்கத்தில் 7.56 ஆக இருந்த எதிர்நீச்சல் 2 சீரியலின் டிஆர்பி, அடுத்த வாரமே 7.93 ஆக அதிகரித்தது. அதற்கு அடுத்த வாரம் 8.36 டிஆர்பி புள்ளிகளை பெற்ற இந்த சீரியல், கடந்த வாரம் 8.49 ரேட்டிங் பெற்று அசத்தி இருந்தது. 


இதுவே அந்த சீரியல் பெற்ற அதிகபட்ச ரேட்டிங் ஆக இருந்த நிலையில், இந்த வாரம் அதைவிட கூடுதலாக டிஆர்பி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். 

இதனிடையே இந்த வாரம் இந்த சீரியலுக்கு 8.90 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து அதற்கு கிடைத்த அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங் இதுவாகும்.

இதனுடன், ஜூன் மாதம் வரை டாப் 10 பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த இந்த சீரியல், தற்போது 4-வது இடத்தை பிடித்துள்ளது. 

மேலும், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை உள்ளிட்ட சீரியல்களை டிஆர்பியில் முந்தியுள்ளது.


தர்ஷன் திருமணத்தைக் குறிவைத்து நடைபெறவுள்ள எபிசோடுகள் தொடரும் நிலையில், ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியல் டிஆர்பி ரேஸில் முதலிடம் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement