• Apr 27 2025

நாங்கள் கைதாவதற்கும் தயாராக இருக்கின்றோம்..! – பா.ரஞ்சித் அதிரடிக் கருத்து!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை உருவாக்கும் இயக்குநர்களில் பா. ரஞ்சித் முதன்மை வகிக்கின்றார். சமூக நீதி, அரசியல் சிந்தனை மற்றும் மனித உரிமைகள் என்பவற்றின் மூலம் தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ள இவர், தற்போது தனது சமீபத்திய படத்தினை திரையிடுவதில் ஏற்பட்ட தடைகளால் மீண்டும் விவாதத்தில் சிக்கியுள்ளார்.

சமீபத்திய பேட்டியில் பா. ரஞ்சித் பேசும் போது, அவருடைய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, "பொலிஸ் துறையினர் படம் திரையிடக்கூடாது என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார்கள் என்று கூறியதுடன் நாங்கள் கைது செய்வதற்கும் தயாராக இருக்கின்றோம்" என்று கூறிய கருத்து சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகின்றது.


பா. ரஞ்சித் இயக்கியுள்ள தற்போதைய திரைப்படம், சாதி அடிப்படையிலான அரசியல் மற்றும் சமூக அடையாளங்களை தீவிரமாக பேசும் படமாக உள்ளது. இப்படம் வெளியீட்டை முன்னிட்டு, சில பகுதிகளில் பொலிஸ் துறையினர் தடுப்புத் தீர்மானங்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பா. ரஞ்சித் கூறியதாவது, "எங்கள் படத்தை திரையிடக்கூடாது என்று போலி நோட்டீஸுக்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. படம் திரையிடுவதை தடுக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் எதிரானது. எங்களை கைது செய்ய விரும்பினால் அதற்கும் நாங்கள் தயார்." என்றார். இந்தத் தகவல் தற்பொழுது மக்கள் மத்தியில் பரபரப்பை உருவாகியுள்ளது.


Advertisement

Advertisement