• Apr 19 2026

’கோட்’ ஃபர்ஸ்ட் சிங்கிளை கேட்க ரெடியா.. அர்ச்சனா கல்பாத்தியின் மாஸ் அறிவிப்பு..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணி மற்றும் பிசினஸ் பணியை தயாரிப்பாளர்கள் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியானது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் ’கோட்’ சிங்கிள் பாடலை கேட்க ரெடியா என்று கூறி ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அனேகமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் இது குறித்த இன்னொரு அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழ் புத்தாண்டு தினத்தில் ’கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்வது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ள நிலையில் இந்த பாடல் விஜய் பாடிய பாடலா? என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜய் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த பாடல் தான் நாளை வெளியாக போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement