• Apr 17 2026

அமலாபால் கல்யாணத்திற்குப் பிறகு இப்படி மாறிட்டாரே- வளைகாப்பு நிகழ்வில் சூப்பராக போஸ் கொடுக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

மைனா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை தான் அமலாபால். இதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி என சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறினார்.


தொடர்ந்து இயக்குநர் விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.


பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்தும் இருக்கின்றார். மேலும் கடந்த அக்டோபர் மாதம் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரைக் காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.


இந்த நிலையில் தனது கணவருடன் நண்பி ஒருவரின் வளைகாப்பு நிகழ்வுக்குச் சென்றுள்ளார்.இது குறித்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement