• Apr 16 2026

அமலாபாலுக்கு வெட்கப்பட கூட தெரியுமா? அசத்தலான வளைகாப்பு வீடியோ..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமான நிலையில் தற்போது அவருக்கு வளைகாப்பு நடந்த நிலையில் அது குறித்த வீடியோவை எவ்வாறு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் வெட்கத்துடன் சிரிக்கும் காட்சிகள் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அமலாபாலுக்கு வெட்கப்பட தெரியுமா என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அமலா பால் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அமலாபால் கர்ப்பிணியாக இருக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்தால் கூட அவர் சமீபத்தில் வெளியான ’ஆடு ஜீவிதம்’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்கு சென்று வந்தார் என்பதும் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் அது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கையில் டாட்டூ வரைந்த காட்சிகளை பதிவு செய்துள்ள நிலையில் அதில் அவர் வெட்கத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு வருகின்றனர். மொத்தத்தில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement