• Apr 16 2026

அஜர்பைஜானை அடுத்து தென்னாப்பிரிக்கா செல்கிறார் அஜித்.. சுரேஷ் சந்திரா கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இதனிடையே அஜித் சில நாட்கள் மட்டும் சென்னை திரும்பி தனது தனிப்பட்ட பணி ஒன்றை முடித்த பின் மீண்டும் அஜர்பைஜான்  செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு பக்கம் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில் ’குட் பேட் அக்லி’ படத்தின் 20 நாட்கள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும், ஜூலை மாதம் மீண்டும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ‘குட் பேட் அக்லி’ படத்தின் குழுவினர் ஜூலை மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு முக்கிய காட்சிகள் படமாக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்னர் இந்த படத்தின் நாயகி, வில்லன் உள்பட முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் உறுதி செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தின் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும் தென்னாப்பிரிக்காவில் தான் அஜித் உடன் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்காக இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்திருப்பதாகவும், அதில் ஒரு பாடல் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும் அந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இன்னொரு பாடலின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என கூறப்படுகிறது.

 எனவே ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில்  முடிந்த பின் சென்னை திரும்பும் அஜித் அடுத்த சில நாட்களிலேயே ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பிற்காக தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளார் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது

Advertisement

Advertisement