சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளான விஷயம் ரவி மோகனின் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான குற்றச்சாட்டுகள் தான். நேற்று ரவி கொடுத்த பேட்டி பலரையும் உலுக்கி இருந்தது. ஆனால் அதற்கு பிறகு ஆர்த்தியின் அம்மாவும் பேட்டி கொடுத்தார்.
இன்னொரு பக்கம், பாடகி கெனிஷா பிரான்சிஸ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், தனது சமூக வலைதள கணக்கு (Instagram) ஹேக் செய்யப்பட்டதாகவும், அதனால் தனக்கு தவறான குற்றச்சாட்டுகள் உருவாகியதாகவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டும் இல்லாமல் ரவியை பிரிந்து செல்வதாகவும், நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை எனவும் தெரிவித்தார். கெனிஷா சென்னையை விட்டு போனபிறகே ரவி மனமுடைந்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், பின்னணி பாடகியும் முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியவருமான சுசித்ரா, இது குறித்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துகள் தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அவரது கருத்துகளில், கெனிஷாவின் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் தனுஷ் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
மேலும், இது தனுஷ், ஆர்த்தி ரவி உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்ட செயலாக இருக்கலாம் என்ற வகையிலான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், தனுசுக்கு சோசியல் மீடியா இருக்கிற எல்லா கள்ளசாவியும் தெரியும். ஆர்த்தியும் தனுஷும் இணைந்து தான் இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்காங்க. தனுஷும் எதையோ அடிச்சிட்டு நைட்டோட நைட்டா இந்த வேலைய பண்ணிருக்குங்க.
இதே மாதிரிதான் தனுஷ் 2016ல என்னோட ட்விட்டர் அக்கவுண்ட்ட ஹேக் பண்ணி எல்லா போட்டோஸுமே லீக் பண்ணாரு. இப்ப 10 வருஷத்தை கழிச்சு மறுபடியும் கெனிசாவோட அக்கவுண்ட்ட ஹேக் பண்ணி இருக்காரு.
கெனிசாவோட அக்கவுண்ட்ட ஹேக் பண்ணது தனுஷ்தான். இது ஜெயம் ரவிக்கும் தெரியும் கெனிசாக்கும் தெரியும்.. என கூறியுள்ளார் சுசித்ரா.
இதற்கிடையில், கெனிஷா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த நேரடி உறுதிப்படுத்தலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விவகாரம் முழுவதும் சமூக வலைத்தள விவாதங்களாக மட்டுமே இருந்து வருகிறது.
Listen News!