• Jun 08 2025

அஜித்தின் குட் புக்கில் இடம் பெற்ற இயக்குனர்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் வேலையை பார்த்து அஜித் அசந்து விட்டதாகவும் ஒரு நாள் முழுவதும் எடுக்க வேண்டிய காட்சியை ஒரு சில மணி நேரத்தில் எடுத்த மின்னல் வேகத்தை பார்த்து அவர் ஆச்சரியம் அடைந்ததாகவும் அஜித்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இதே ரீதியில் படப்பிடிப்பு சென்றால் அஜித்தின் காட்சிகள் இன்னும் 20 நாட்களில் முடிந்து விடும் என்றும் அந்த அளவுக்கு ஸ்பீடாக அவர் வேலை பார்க்கிறார் என்றும் உதவி இயக்குனர்களையும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களையும் அவர் வேலை வாங்கும் விதத்தை பார்த்து இதுவரை இப்படி ஒரு இயக்குனரை நான் பார்த்ததே இல்லை என்று தனக்கு நெருக்கமான வட்டாரங்கள் இடம் கூறியிருப்பதாக தெரிகிறது.



எனவே இந்த படத்தை முடித்தவுடன் படம் ஓரளவு ரிசல்ட் வந்தால் கூட ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மீண்டும் ஒரு படம் வாய்ப்பு கொடுக்க அஜித் முடிவு செய்திருப்பதாகவும், இந்த முடிவு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான ’குட் பேட் அக்லி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் நல்ல வரவேற்பு பெற்றதை எடுத்து அஜித்தின் குட்புக்கில் ஆதிக் ரவிச்சந்திரன் இடம் பெற்று விட்டார் என்றே கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இதற்கு நேர்மாறாக மகிழ் திருமேனி இயக்கம் இருப்பதாகவும் நீண்ட காலம் அவர் எடுத்துக் கொள்வதாகவும் ’விடாமுயற்சி’ படத்தை முடித்துவிட்டு தன்னை விட்டால் போதும் என்று அந்த படத்தின் குழுவினர்களிடமிருந்து அஜித் தப்பிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement