கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் ஸ்ரீ வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ,மாநகரம் ,இறுக்கப்பற்று போன்ற நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் இப்போது மன நிலை சரியில்லாமல் போயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது கூலி திரைப்பட வேலைப்பளுவின் மத்தியில் இவரது முதல் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இவருடன் தொடர்பு கொள்வதற்காக பல முறை முயற்சி செய்துள்ளதாக அவர் தரப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன மேலும் பலர் இவர் தற்போது வடஇந்தியாவில் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் ஸ்ரீ தினமும் தனது அம்மாவிற்கு அழைப்பு விடுத்து அவர் குரலை மாத்திரம் கேட்டு விட்டு பின்னர் போனை கட் பண்ணுவதாகவும் தெரியவந்துள்ளது.இவர் தற்போது தனியாக ஒரு அறையில் வாழ்ந்து வருவதாகவும் ஒரு வருடமாக பூட்டிய அறையில் அவருக்கு தேவையானதை அவரே சமைத்து போட்ட துணியை போட்டு இன்ஸ்டா போஸ்ட் போட்டு வருகின்றார்.
Listen News!