• Apr 17 2026

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நடிகர் ஹரிஸ் கல்யாண்- அடடே இவரும் ஹவுஸ்மேட்ஸாகத் தான் வந்திருக்கின்றாரா?-Bigg Boss Promo 4

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் விஜய் வர்மா மற்றும் அனன்யா ஆகியோர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே வெளியான ப்ரோமோவில், ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜோவிகா, விசித்ரா, நிக்சன் ஆகியோர் விக்ரமை நாமினேஷன் செய்கின்றனர். அர்ச்சனா, பூர்ணிமா இருவரும் அனன்யாவுக்கு நாமினேஷன் செய்கின்றனர். 

அடுத்து அனன்யா, மாயா ஆகிய இருவரும் பூர்ணிமாவை நாமினேட் செய்கின்றனர். இவ்வாறு மாயா பூர்ணிமாவை நாமினேட் செய்ததோடு மட்டும் இல்லாமல், ஒன்னு நான் இருக்கனும் இல்ல அவங்க இருக்கணும் என சொல்லுகிறார்.இதனால் பூர்ணிமா தற்பொழுது கடும் அப்செட்டில் இருக்கின்றார்.

இப்படியான நிலையில் தற்பொழுது இன்றைய நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நடிகர் ஹரிஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.அத்தோடு தான் பிக்பாஸ் வீட்டில் தங்குவற்கான அனுமதியையும் பிக்பாஸிடம் கேட்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement