• May 15 2026

இன்று விஷால் படம் என்றால் நாளை விஜய் படம்! ரத்னம் பட பிரச்சனைக்கு கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர்

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்னம் படத்தை திருச்சி பகுதியில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளியிடவிடாமல் பிரச்சனை செய்வதாக கூறியிருக்கும் நிலையில் இதற்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.


ரத்னம் திரைப்படத்தின் இந்த பிரச்சனை சர்ச்சையை கிளம்பியதை தொடர்ந்து  விஷால் ஓடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதில் “எந்த ஒரு தொடர்பும் இல்லாத நபர் தற்போது திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் உள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு கடிதத்தை அளித்து படத்தை முடக்குகிறார்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.


இந்த நிலையிலேயே இவருக்கு ஆதரவாக ஜெயக்குமார் பேசுகையில் "இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இதுதான்! தமிழ் சினிமாவிற்கும் இதுதான்! அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும்தான் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர்”  என முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஷால் ரெட்ஜெயண்ட் நிறுவனத்திற்கு எதிராக பேசியது வைரலாகியது என்பதில் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement