• Apr 27 2025

ஜெயம் ரவி ரசிகருக்கு நடந்த சோகம்! நேரில் சென்று இரங்கல் தெரிவித்த நடிகர்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

பெரும்பாலான நடிகர்கள் தங்கள் ரசிகர்களை வைத்து ரசிகர் மன்றம் ஒன்றை ஆரம்பித்து அவர்களை வைத்து  சமூக நேய செயற்பாடுகளை செய்வர். அவ்வாறு சமீபத்தில் நடிகர் ஜெயம்ரவியின் ரசிகர் மன்றத்தில் மரணம் ஒன்று ஏற்பட்டுள்ளது.


ஜெயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகிய ரவி முதல் படத்திலேயே அமோக வெற்றிகொடுத்து ஜெயம் ரவியாகவும் மாறினார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.


இந்த நிலையிலேயே சமீபத்தில் இவரது ரசிகர்மன்றத்தில் தலைவராக இருந்த 33 வயதான ராஜா என்பவர் உடல் நல குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னை எம். ஜி . ஆர் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நடிகர் ஜெயம் ரவி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இது பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியத்துடன் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.  

Advertisement

Advertisement