• Apr 27 2025

தொழிலதிபர் ஆகிவிட்ட ‘அண்ணா’ சீரியல் நடிகை.. இதற்கு தான் சீரியலில் இருந்து விலகினாரா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ டிவியில் ஒளிபரப்பான ‘அண்ணா’ சீரியலில் இருந்து சமீபத்தில் நடிகை தர்ஷு விலகிய நிலையில் அவர் தற்போது தொழிலதிபர் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ டிவியில் ‘அண்ணா’ என்ற சீரியல் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த சீரியலில் செந்தில் குமார் மற்றும் நித்யா ராம் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் 200க்கும் அதிகமான எபிசோடுகளாக பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த தர்ஷு திடீரென அந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் அவர் எதற்காக விலகினார் என்ற தகவல் இதுவரை வெளியே தெரியாமல் இருந்தது.



இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி தர்ஷு சொந்தமாக பிசினஸ் தொடங்கியுள்ளதாகவும் இன்ஃபுளூயன்சர்ஸ்  ஏஜென்சி ஒன்றை அவர் சொந்தமாக நடத்தி அதன் மூலம் நல்ல வருமானம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி ஈவென்ட்களில் பிஸியாக இருக்கிறார் என்றும் ஈவென்ட்கள் நடத்தி தருவதன் மூலம் அவருக்கு லட்சக்கணக்கில் வருமானம் வந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஈவென்ட்கள் நடத்திக் கொடுக்கும் தொழில் மற்றும் சொந்த பிசினஸ் காரணமாகத்தான் அவரால் சீரியலுக்கு சரியாக தேதி கொடுத்து ஒத்துழைக்க முடியவில்லை என்றும் அதனால் தான் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement