• May 16 2024

தனி ஒருவன் படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

இவ்வாறுஇருக்கையில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தனி ஒருவன்.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த இப்படம், ப்ளாக் பஸ்டர் அளவில் வெற்றியடைந்தது.

மேலும் இப்படத்தில் ஹீரோவாக நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அபிமன்யுவாக நம் மனதை கவந்தவர் நடிகர் அரவிந்த்.

ரசிகர்களிடத்தே நல்ல விமர்சன ரீதியாக பெற்ற இத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகமுழுவதும் சுமார் ரூ. 63 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.மேலும் ஜெயம் ரவி - மோகன் ராஜா கூட்டணியில் வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்த படமும் தனி ஒருவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement