• May 17 2024

பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான “சேத்துமான்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குநர் பா.ரஞ்சித்.இவர் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் புதிய படங்களை தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே அவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எனினும் இதையடுத்து பொம்மை நாயகி, குதிரைவால், சேத்துமான் ஆகிய படங்களை தயாரித்து வருகின்றார்

மேலும் இதில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘சேத்துமான்’. அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பல விருது விழாக்களில் பங்கேற்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் மே 27-ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடித்தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இப்படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement