• Apr 27 2025

டிலீட் ஆக்கப்பட்ட யுவன் இன்ஸ்டா பேஜ்! விசில் போடு பாடல் வழக்கில் வெற்றி பெற்றாரா மர்ம நபர்?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒருவர் பிரபலமாகிக்கொண்டு சென்றாலே அவருக்கு ரசிகர்களுடன் சேர்ந்தே எதிர்ப்புகளும் வர ஆரம்பிக்கும். அவ்வாறே முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விமர்சனங்கள் உருவாகின்றது. 


அவ்வாறே சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கி விஜய் நடிக்கும் கோட் படத்தின் 1 சிங்கிள் வெளியாகி இருந்தது . இதற்கு யுவன்சங்கர் ராஜ இசையமைத்தும் இருந்தார். இவ்வாறு இருக்கையில் இந்த பாடலை நீக்க வேண்டும் எனக்கூறி ஒன்லைன் மூலமாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. 


இந்த நிலையிலேயே யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்ட்டா ஐடி முழுமையாக டிலீட் செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் கொடுத்த வழக்கினால்தான் இவ்வாறு நடந்துள்ளதா, அல்லது குறித்த பாடல் எதிர் பார்த்த அளவு இல்லை என ரசிகர்கள் விமர்சித்ததனால் யுவன் டிலீட் செய்துள்ளாரா? என நெட்டிசன்களிடையே கேள்விகள் எழும்பி வருகின்றது. எனினும் டிலீட் செய்ததற்கான காரணம் என்ன என்று அதிகார பூர்வ தகவல் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 யுவன் இன்ஸ்டா ஐடி இதோ 

https://www.instagram.com/itsyuvan/?hl=en

Advertisement

Advertisement