தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் யோகி பாபு. தனது தனித்துவமான தோற்றமும், நேரடியான நகைச்சுவை நடிப்பும் மூலம் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் துணைக் கதாபாத்திரங்களில் கலக்கிய இவர், இன்று கதாநாயகனாகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். “மண்டேலா”, “யாஷிகா”, “பொம்மை நாயகி” உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், தற்போதைய தமிழ் சினிமாவின் பல்துறை திறமை கொண்ட நடிகராகவலம் வர ஆரம்பித்து விட்டார்.
சமீபத்திய ஒரு பேட்டியில், “மண்டேலா” திரைப்படம் குறித்து மனதைக் திறந்து பேசிய யோகி பாபு, அந்த திரைப்படத்தின் கதையைத் தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக விவரிக்கிறார். “மண்டேலா” படம் எப்படி ஆரம்பமானது, எப்படி அது தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது, மேலும் “ஆஸ்கார்” பரிந்துரைக்கப்படும் போது ஏற்பட்ட உணர்வுகள் ஆகிய அனைத்தையும் மிகுந்த உணர்வோடு அவர் பகிர்ந்துள்ளார்.
"மண்டேலா" படத்தின் கதையை முதன்முறையாக கேட்ட அனுபவத்தை பற்றி கூறும் போது, “ஒரு ஷூட்டிங்கிலிருந்து திரும்பி மிகவும் களைப்பாக இருந்த நேரம். படுத்துக்கொண்டே இருந்தேன். அப்போது டைரக்டர் அஸ்வின் கதையைச் சொல்ல வந்தார். அவரிடம் ‘நீங்களும் படுத்துக்கொண்டு சொல்லுங்கள்’ என்றேன். அஸ்வின், நெல்சன் இருவரும் ‘இந்த படம் உங்களுக்கேத்தான்னு நினைக்கிறோம், பண்ணுங்க’ என்றார்கள். அந்த நேரத்தில் கதை ஒரு வெற்றிப் படமாக மாறும் என நானே நம்பவில்லை,” என அவர் கூறியிருந்தார் .
“மண்டேலா” வெற்றிகரமாக வெளியானதும், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூகத்தில் இடம்பெறும் முக்கியமான விடயங்களை நகைச்சுவையோடு சொல்லிய கதை, அனைவரையும் ஈர்த்தது. இப்படம் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது என்பது யோகி பாபுவுக்கு மிகுந்த பெருமை. எனக் கூறியிருந்தார். மேலும் “ஒரு நாள் திடீரென்று போன் வந்தது. அதில் ‘மண்டேலா’ படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது’ என கூறினார்கள். அந்தச் செய்தி எனக்கு மிகவும் ஆனந்தம் அளித்தது. நம்முடைய முயற்சிக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.” எனக் கூறியது ரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது .
மேலும் கூறும் போது “நான் நடித்த முகத்தை வைத்து ஒரு படம் எடுத்து, அதைக் கொண்டு ஆஸ்கார் பரிந்துரைக்கபடுகிறது என்பது என்னை மிகவும் பாதித்தது. அந்தச் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது ஒரு நடிகராக எனது வாழ்நாள் சாதனையாகவே இருக்கும்,” என அவர் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது . ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் கலைஞராக யோகி பாபு இன்று வலம் வருகின்றார்.
Listen News!