சந்தானம் சூரிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு இவர் தற்போது அஜித் ,விஜய் ,சூர்யா ,ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களுடன் கூட்டணி வைத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனது பெரும்பாலான திரைப்படங்களின் புரொமோஷன் நிகழ்வுகளில் இவர் கலந்து கொள்வதில்லை இந்நிலையில் தற்போது இவர் நடித்த கஜானா படத்தின் புரொமோஷனுக்காக இவரை அழைத்த போது இவர் வரமறுத்துள்ளதாகவும் அவ்வாறு வருவதென்றால் 7 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் குறித்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் யோகிபாபுவின் மீது கொந்தளிப்பாக பேசியதுடன் சாபம் விடாத குறையாக திட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் விமர்சனங்களிற்கும் ஆளாகி வருகின்றார்.
Listen News!