தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார் யோகி பாபு. இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'ஏஸ்' திரைப்படத்தில் முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் யோகி பாபு லேடி கெட்டப்பில் நடித்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.
இவர் "கோலமாவு கோகிலா" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகின்றார். தற்போது ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் "ஜோரா கைய தட்டுங்க" என்ற திரைப்படத்தில் ஹீரோவா நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 23 திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார் .இந்த படத்தில் யோகிபாபு லேடி கெட்டப்பில் நடித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது .இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!