• Jul 18 2025

திடீரென சம்பளத்தை குறைத்த பிரபல நடிகர்..! காரணம் என்ன..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் அவரது அடுத்த பிரம்மாண்ட திரைப்படமான ‘ராஜா சாப்’ மூலம் ஹாரர் ஜானரில் முதன்முறையாக ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவரத் தயாராக இருக்கிறார்.இயக்குநர் மாருதியின் இயக்கத்தில், People Media Factory தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இதற்கிடையில் ‘ராஜா சாப்’ திரைப்படத்திற்காக பிரபாஸ் அவருடைய சம்பளத்தை குறைத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வழக்கமாக ஒரு படத்திற்கு ரூ. 150 கோடி வரை சம்பளம் பெறும் பிரபாஸ் இந்த ஹாரர் படத்திற்கு ரூ. 100 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 


இப்படத்தின் பட்ஜெட்டை சமநிலைப்படுத்தும் நோக்கில் பிரபாஸ் இதனை செய்யத் தயங்காமல் ஒப்புக்கொண்டாராம். இவர் இவ்வாறு நடந்து கொண்டது தற்போது திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

Advertisement

Advertisement