• Aug 25 2025

கோபி சொன்ன உண்மை.. கண்ணீரோட நிற்கும் பாக்கியா.! நடந்தது என்ன.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி பாக்கியா கிட்ட வந்து இனியாவைப் பற்றிக் கதைக்கணும் என்கிறார். மேலும் நீ ரெஸ்டாரெண்டை சம்மந்தி தான் வாங்கினவர் என்று சொல்லும் போது நம்பியிருக்கணும் என்கிறார். அதுக்கு பாக்கியா உங்களோட இனியா ஏதும் கதைச்சவளா என்று கேட்கிறார். அதனை அடுத்து கோபி ஆமா எனக்கு நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னவள் என்கிறார்.

அதனை அடுத்து கோபி என்னதான் இருந்தாலும் அது கஷ்டப்பட்டு உழைச்சுக் கட்டின ரெஸ்டாரெண்ட் போனது இழப்பு தானே என்கிறார். அதுக்கு பாக்கியா அதுதான் இன்னொரு ரெஸ்டாரெண்ட் open பண்ணிட்டனே அங்க விட்டத இதில பிடிச்சுக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோபி இதுதான் பாக்கியலட்சுமி என்ன நடந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கிற குணம் தான் எனக்கு உன்கிட்ட பிடிச்சதே என்கிறார்.


இதைத் தொடர்ந்து கோபி பாக்கியாவைப் பாத்து இனியா அண்டைக்கு ரெஸ்டாரெண்டுக்கு வரும் போது ஆகாஷ் அங்க நின்டிருக்கிறான் போல அதைப் பாத்த நிதீஷ் இனியா மேல சந்தேகப்பட்டு சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார் என்று  சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா ஷாக் ஆகுறார். பின் பாக்கியா, இனியா சந்தோசமா இருந்த பொண்ணு இப்ப அவள் கஷ்டப்படுறதைப் பார்க்கும் போது ரொம்பவே கவலையாக இருக்கு என்கிறார்.

அதனை அடுத்து சுதாகரோட மனைவி இனியாவைப் பாத்து உனக்கு புகுந்த வீட்டைப் பற்றிய சிந்தனையே இல்ல என்கிறார். அதுக்கு இனியா நான் ஒன்னும் உங்க பையன கல்யாணம் பண்ணனும் என்று நினைக்கல அவர் தான் என்னை விரும்பினார் என்று கோபமாகச் சொல்லுறார். பின் பாக்கியா சுதாகர் வீட்ட போய் இனியாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement