• May 18 2025

விஜய் சேதுபதியைப் பார்த்ததும் மனம் நெகிழ்ந்தேன்...! –விஷால் பகிர்ந்த உருக்கமான தருணங்கள்..

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்பு, மரியாதை, உறவுகள் என அனைத்திற்கும் அடையாளமாக திகழ்கின்ற நடிகர்கள் சிலர் மட்டுமே காணப்படுகின்றனர். அத்தகைய நடிகர்களுள் ஒருவரான விஷால், சமீபத்தில் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது,  "பல திறமைகள் கொண்ட என் நண்பர் விஜய் சேதுபதியை விமானநிலையத்தில் பார்த்தேன். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் அவரை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளேன்..! கடவுள் உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு ஆசீர்வதிப்பார்." என்றார்.


இந்த பதிவை பார்த்த பலரும் “விஷாலும் விஜய் சேதுபதியும் உண்மையான உறவைக் கொண்டவர்கள் போல தெரிகிறார்கள்” எனக் கூறி வருகின்றனர். அத்துடன் இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இன்ஸ்டாவில் தீயாக பரவிவருவதுடன் சிலர் இந்த சந்திப்பு அவர்களின் அடுத்த படத்திற்கான அடித்தளமாக இருக்கலாம் எனவும் கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.


Advertisement

Advertisement