• May 18 2025

முகத்தில் சிரிப்பு…கண்களில் தீ..! இன்ஸ்டாவில் ட்ரெண்டான மோனாலிசாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் சமூக வலைத்தளங்களில் திடீரென பிரபலமாகிறார்கள். ஆனால் அந்த புகழ் சிலருக்கு மட்டும் நிலைத்திருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளா விழாவில், ருத்திராட்ச மாலை விற்று கொண்டிருந்த மோனாலிசா என்ற இளம் பெண், ஒரு யூடியூப் வீடியோவின் மூலம் ஒரு நைட்டிலேயே இந்தியா முழுவதும் வைரலானார்.


அந்த வீடியோவில் அவர் பேசும் வார்த்தைகள், முகபாவனைகள் மற்றும் இயற்கை அழகு என்பன இணையத்தை அதிர வைத்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ரசிகர்கள் அவர் யார் என்று தேடிக்  கண்டுபிடித்து, "Crush" என்று அழைக்கத் தொடங்கினர். 


மோனாலிசாவின் பிரபலத்தைக் கண்டு, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, "இவரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக" அதிகாரபூர்வமாக அறிவித்தார். அவருக்கு முன்பணம் கொடுத்து புகைப்பட ஷூட் ஆகியவற்றையும் ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.


ஆனால், சனோஜ் மிஸ்ரா தவறான நோக்கத்தில் பெண்களை பயன்படுத்த முயற்சித்ததற்கான புகார்கள் பொலிஸாரிடம் பதிவாகியதுடன், இது தொடர்பாக தீவிர விசாரணையையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மோனாலிசாவின் திரைவாழ்க்கை பாதியிலேயே முடிந்து விட்டதாகப் பலரும் கருதினர். 


இந்த சூழ்நிலையில், மோனாலிசா அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று மீண்டும் இன்ஸ்டாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் " கண் அழகி கம்பேக்..!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement