• Apr 16 2026

இந்தியா முழுவதும் அன்னதானம் வழங்கவுள்ள 'விரோஷ்' ஜோடி..!! எங்கெங்கு தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணங்களில் ஒன்றாக ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமணம் அமைந்தது. பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. பாரம்பரிய தென்னிந்திய உடையில் ஜோடியாக தோன்றிய இவர்களை சிலர் சிவன்–பார்வதி போன்ற தெய்வீகத் தம்பதியினராக புகழ்ந்து வருகின்றனர்..

மேலும் ராஷ்மிகா மந்தனா திருமணத்தின் போது அணிந்த ஆரஞ்சு நிற சேலையின் விலை ரூ.5 லட்சத்திற்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. நகைகள் மற்றும் மேக்கப் உள்ளிட்ட மொத்த அலங்காரச் செலவு ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பையொட்டி முக்கிய நகரங்களில் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி சென்னை,கோயம்பத்தூர், புதுச்சேரியிலும் இன்றைய தினம் அன்னதானம் வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் திருமணத்தின் பிறகு இந்தியாவின் பல கோயில்களில் அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அன்னதானம் என்பது உணவு வழங்குவதன் மூலம் செய்யப்படும் புனித பாரம்பரிய தொண்டு சேவையாகும்.

தங்களது அறிவிப்பில், கர்நாடகாவின் சிவோகம் கோயில், ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயில் மற்றும் ஹரே கிருஷ்ணா மலைவில் உள்ள ராதா கிருஷ்ணா கோயில், உத்தரபிரதேசத்தின் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா பலராம் மந்திர், அசாமின் ஸ்ரீ ருக்மிணி கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் உணவு வழங்கும் பணியை அவர்கள் மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement