விஜய் - சங்கீதா இருவரும் காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், தற்போது அரசியலில் களம் இறங்கி உள்ளார். இதனால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அதிரடி முடிவை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்துகோரி உள்ளதோடு, தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் உறவில் இருப்பதாகவும், குறித்த நடிகை புகைப்படங்களை வெளியிட்டது எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அவமானத்தை தருவதாகவும், விஜயின் வருமானத்திற்கு ஏற்ப தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், அதுவரையில் தான் தன்னுடைய புகுந்த வீடான நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருக்க அனுமதி வேண்டும் எனவும் குறிப்பிட்ட மனு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து தனது தந்தையை அன்ஃபாலோ செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சில சேனல்களிலும் வலைத்தளங்களிலும் அவர் தனது சமூக வலைதள கணக்குகளை விட்டு விலகி உள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.
நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஆரம்பத்தில் இருந்து நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில், தற்போது இந்த விவாகரத்து சர்ச்சைக்கு பின்பு அவர்கள் பற்றிய பழைய வதந்திகள் மீண்டும் பரவி திருமண வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!