• Aug 08 2025

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் மூழ்கியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த சில பிரபலங்கள் மீது தற்போது போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதனால், திரையுலகத்தில் நம்பிக்கை இழப்பும்,கவலையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் "நம்மட ஹீரோக்கள் இப்புடியா?" என்ற ஏமாற்றம் பெருகிக் கொண்டே வருகிறது. இந்த சர்ச்சையில் தற்போது மிகுந்த விவாதத்துக்குள்ளானவர்கள் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா.

ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் முக்கிய இடம் பிடித்த நடிகராக விளங்கியவர் ஸ்ரீகாந்த். சமீப காலமாக வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அத்துடன், நடிகர் கிருஷ்ணாவும் பல படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருந்தார்.


தற்பொழுது இருவருமே போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு உட்பட்டனர். இதனிடையே அவர்களது கைதுகள், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில்,போதைப்பொருள் வழக்குகள் மற்றும் நடிகர்கள் பற்றிய கேள்விக்கு சிறப்பாக பதிலளித்திருந்தார். அதன்போது மாரி செல்வராஜ், “யாரு பண்ணாலும் தப்பு, தப்பு தானே. நடிகர் என்றால் தப்பு பண்ணலாமா? சட்ட விரோதமா செய்யுற எல்லாமே தப்பு தான்." எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement