• Aug 08 2025

"லவ் மேரேஜ்" படம் வெற்றி பெற வேண்டும்.!திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த விக்ரம் பிரபு..!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் . இந்த நிலையில் ஜூன் 27 ஆம் திகதி 'லவ் மேரேஜ்' திரைப்படம் வெளியாக இருப்பதால் சாமிதரிசனம்  செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.  


" லவ் மேரேஜ்" திரைப்படத்தினை இயக்குனர் கே .சுபாஷ் இயக்கத்தில்  விக்ரம் பிரபு நடிப்பில் திரையில் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் மேலும்  அஜய், ரஞ்சனா, விஜயகுமார் நடித்திருக்கும் காதல் திரைப்படம்.  மேலும் இந்த படத்திற்கு  இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தினை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள் என்று தான்  கூறமுடியும் .


இந்நிலையில்  திரைப்படம் நல்ல படியாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் "செய்ய வந்த  நடிகர் விக்ரம் பிரபுவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்துள்ளது. இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் வரும் 27ம் திகதி நான்  நடித்துள்ள 'லவ் மேரேஜ்' திரைப்படம் ரிலீஸாகவுள்ள படியால்  சாமி தரிசனம் மேற்கொண்டார் என்று கூறியிருந்தார். 







Advertisement

Advertisement