• May 15 2025

ரோகிணியை வெளுத்து வாங்கிய விஜயா..! அமைதியாக வேடிக்கை பார்க்கும் மனோஜ்..!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து மீனாவைப் பாத்து அந்த அருண் நேரம் பாத்துப் பழிவாங்கிட்டான் என்கிறார். பின் மீனா, சார் சொன்ன மாதிரி தேவையில்லாத பிரச்சனை எதுவும் பண்ணிடாதீங்க பிறகு கடைசி வரைக்கும் லைசன்ஸ் கிடைக்காத மாதிரி பண்ணிடுவாங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து விஜயா மனோஜைப் பாத்து வேலை செய்யுறவங்கள நம்பி கடையை ஒப்படைச்சிட்டு வராத என்கிறார்.

மேலும் நம்ம வீட்டையே ஒன்னு ஏமாத்திக் கொண்டிருக்கு அப்படி இருக்கும் போது கடையில எப்புடி அடுத்தவைய நம்புறது என்று கேக்கிறார். அதைக் கேட்ட ரோகிணி காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்களா என்று சொல்லுறார். பின் முதல் எல்லாம் தினமும் மீனாவுக்குத் தான் பேச்சு விழும் இப்ப டெய்லி எனக்குத் தான் விழுகுது என்கிறார். இதனை அடுத்து மனோஜ் விஜயாவுக்கு ரோகிணி கடைக்கு வாறதைப் பற்றிச் சொல்லுறார்.


அதைக் கேட்ட விஜயா ரோகிணிகிட்ட போய் நீ எதுக்கு மனோஜோட கடைக்குப் போற என்று கேக்கிறார். அதுக்கு ரோகிணி இல்ல ஆன்ட்டி நான் போறேல என்று சொல்லுறார். பின் விஜயா நீ இப்பவெல்லாம் வாயைத் திறந்தாலே பொய் மட்டும் தான் சொல்லுற என்று கோபமாகக் கத்துறார். அப்ப மனோஜ் எதுவும் கதைக்காமல் அமைதியாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து ரோகிணி மனோஜை பாத்து நான் கடைக்கு வாறத எதுக்கு அம்மா கிட்ட சொன்னீ என்று கேக்கிறார். பின் முத்து தன்ர பிரெண்ட்ஸோட குடிச்சுக் கொண்டிருக்கிறார். அப்ப அருணோட நடந்த பிரச்சனையை அவங்களுக்குச் சொல்லுறார். அதனைத் தொடர்ந்து முத்து அருண் வீட்டிற்கு பிரெண்ட்ஸோட போய் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.


Advertisement

Advertisement