• Aug 08 2025

விஜய் - திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம் நடித்தும் பின்னர் மறைந்திருந்தார். பின்னர் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு மீண்டும் தொடர்ந்து சினிமா, நிகழ்ச்சிகளில் ஆக்டீவாக இருக்கிறார்.


இந்நிலையில் தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தை வனிதா இயக்கியுள்ளார். இப்படம் குறித்து பேசிய ஒரு பேட்டியில் அவர் கூறிய விஜய் மற்றும் த்ரிஷா குறித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.


"விஜய்க்கும் எனக்கும் பல வருட பந்தம் இருக்கிறது. அவரது பிறந்தநாளன்று த்ரிஷா போட்டிருந்த புகைப்படம் வைரலானது. அதை பார்த்ததும் சிலர் விமர்சிக்கிறார்கள் என்று நினைத்து விஜய்க்கு அந்த பதிவு ஷேர் செய்து ஒரு மெசேஜ் அனுப்பினேன். பிறகு தூங்கினேன்… ஆனால் அதே இரவு அவர் என் கனவில் வந்தார்" என அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement