விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'தலைவன் தலைவி' தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.சமீபத்தில் 'தலைவன் தலைவி' படத்தின் டீசர் வெளியானது இதை தொடர்ந்து படக்குழுவில் உள்ளவர்கள் விஜய் சேதுபதியின் ஒரு செயலை பாராட்டி வருகின்றனர்.
டீசர் வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் அதிகபட்ஷ பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. விடுதலை 2 படத்தின் பின்னர் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம் இது ஆகும். இதைவிட முதன் முறையாக விஜய் சேதுபதி நித்தியமேனன் இணைந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Listen News!