• May 16 2026

தேர்தல் ரிசல்டுக்கு முன் கோயில் கோயிலாக சுற்றும் விஜய்! ஷீரடியில் கனிகாவுடன் செல்ஃபி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும்,  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து கோயில் தரிசனங்களில் ஈடுபட்டு வருகிறார். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. அதில் அவரது கட்சி 233 தொகுதிகளில் போட்டியிட்டது. அவர் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் நேரடியாக களம் இறங்கியிருந்தார்.

வாக்குப்பதிவு முடிந்ததும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்த விஜய், அதன் பின்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சத்ரு சம்ஹார பூஜையில் கலந்து கொண்டார். 

இதனைத் தொடர்ந்து, இன்று தனி விமானம் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் சில நெருங்கிய உறவினர்களும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா,  ஷீரடியில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து செல்ஃபி எடுத்துள்ளார்.. 

இதன்போது தனது அனுபவத்தை பகிர்ந்த அவர் கூறுகையில், “அவருடன் திரையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை . ஆனால் இன்று அவரை நேரில் பார்த்தது உண்மையிலேயே ஒரு அற்புதமான தருணம். 

பாதுகாப்பு அதிகாரிகள் அவசரமாக அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோதிலும், அவர் சற்று நின்று எங்களை கவனித்து, சில பணிவான அன்பான வார்த்தைகளைப் பேசினார். வெற்றி  உங்களுடன் இருக்கட்டும் விஜய். நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம்!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement