• Apr 16 2026

முடிந்தது சஸ்பென்ஸ்.! வைரலானது விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனாவின் Wedding போட்டோஸ்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்ட விஷயம் என்னவென்றால், நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமணம் குறித்த தகவல்கள் தான். பல நாட்களாக இவர்கள் குறித்து பரவி வந்த நட்பு மற்றும் காதல் வதந்திகள் காரணமாக, இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், பிப்ரவரி 26 ஆம் தேதி, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட எளிமையான ஆனால் கோலாகலமான நிகழ்வாக இவர்களின் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையில் இருவரும் மிக அழகாகவும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டனர். 

புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸினைப் பெற்றுள்ளன. ரசிகர்கள் மட்டுமல்லாது, பல திரையுலக பிரபலங்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement