• Apr 16 2026

சக்திவேலுக்கு தெரியவந்த உண்மை.. விடாப்பிடியாக நிற்கும் கோமதி.! டுடே எபிசொட்

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி மீனாவைப் பார்த்து என்ர அண்ணன் மகனோட கல்யாணம் நின்னு போச்சு என்கிறார். அதுக்கு மீனா தெரியும் அத்த ராஜி சொன்னா என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் வந்து நிற்கிறதை பார்த்த மீனா உடனே எழும்பி நிற்கிறார். ஆனா, கோமதியோ அவரை காணாத மாதிரியே பேசாம இருக்கிறார். அப்படியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள்.

அதனை அடுத்து, சக்திவேல் பொம்பிளையோட அப்பாகிட்ட எதுக்காக நிச்சயதார்த்தத்தை நிப்பாட்டினீங்க என்று கேட்கிறார். அதுக்கு பொண்ணோட அப்பா எங்க பொண்ணு வாழ்க்கையை ஜோசிச்சு தான் நாங்க இப்படி ஒரு முடிவெடுத்தோம் என்கிறார். அதைக் கேட்ட சக்திவேல் நடந்தது உண்மையான கல்யாணமே இல்ல என்கிறார்.


மேலும், சின்ன குடும்பப் பிரச்சனை அவ்வளவு தான் என்கிறார் சக்திவேல். பின் பொம்பிளையோட அப்பா உங்களுக்கு நெருங்கினவங்க தான் சொன்னவங்க அதுதான் நாங்க இப்படி ஒரு முடிவெடுத்தோம் என்கிறார். அதைக் கேட்ட சக்திவேல் யார் சொன்னவங்க என்று கேட்கிறார். பின் பொம்பிளையோட அப்பா உங்க அம்மா தான் சொன்னாங்க என்கிறார்.

அதைக் கேட்ட சக்திவேல் ஷாக் ஆகுறார். மறுபக்கம் மயில் சரவணனுக்கு போன் எடுக்கிறார். அதைப் பார்த்த சரவணன் கோபப்படுறார். அதனை அடுத்து சக்திவேல் வீட்ட வந்து நடந்ததெல்லாத்தையும் சொல்லிப் பேசுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement