• Aug 08 2025

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து வருகின்றார். அந்தவகையில், அவரது புதிய இலக்கிய சாதனை 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூல் ஜூலை 13ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நூலின் முகப்போவியத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்ட வைரமுத்து, அதனுடன் தொடர்புடைய பல உணர்வுகளையும் பகிர்ந்துள்ளார்.


நூல் வெளியீட்டு அறிவிப்பின் போது கவிஞர் வைரமுத்து, “12வது வயதில் நான் கண்ட கனவுதான் இன்றைய இந்த நூலாக்கமாகி இருக்கிறது. உலகத் தமிழருக்காக இந்த ‘வள்ளுவர் மறை’ நூலை எழுதியிருக்கிறேன். இதன் முகப்போவியம் என் மனத்தில் பல ஆண்டுகளாக பசுமையாக இருந்த காட்சியின் வெளிப்பாடு. 72வது வயதில் இந்த கனவிற்கு உரிய உருவம் கிடைத்தது.” எனக் கூறியுள்ளார்.


ஜூலை 13ம் தேதி நடைபெற இருக்கும் நூல் வெளியீட்டு விழாவில், உலகத் தமிழ் அறிவியல் வட்டாரங்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலர் பங்கேற்கவுள்ளனர். தனது எழுத்துச் சிந்தனைகளாலும், கவிதைகளாலும், உரைகளாலும், தமிழை உலகளவில் தூக்கிப் பிடித்தவர் கவிஞர் வைரமுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement