• Apr 26 2025

மீண்டும் வெற்றிக் கொடி நாட்டிய வடிவேல்..."கேங்கர்ஸ்" படத்தின் திரைவிமர்சனம்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து அளிக்கின்ற வகையில் உருவாகியுள்ள படம் தான் " கேங்கர்ஸ்". இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நகைச்சுவை உலகின் மன்னன் என அறியப்படும் வடிவேல் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

முதல் நாளிலே தமிழகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்ட ஆரம்பித்துள்ளனர். திரைப்படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள், நடிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த ரசிகர்கள், “இந்த படம் சுந்தர்.சி – வடிவேல் கூட்டணியை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டுவந்துள்ளது.” என உருக்கமாகப் பகிர்ந்துள்ளனர்.


இந்தப் படம் வெறும் நகைச்சுவைக்கு மட்டுமல்ல, சமூக நியாயத்தையும் நம்மை சிந்திக்க வைக்கும் நேர்மையான கதையையும் கொண்டுள்ளது. வடிவேல் இதில் ஒரு சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். 

படத்திலுள்ள ஒவ்வொரு சீனிலும், வடிவேல் அவருடைய தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றார். இயக்குநர் சுந்தர்.சி, வடிவேலை மீண்டும் தனது படத்திற்காக தேர்வு செய்திருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் படத்தைப் பார்த்த ரசிகர்கள், “நாங்க இவ்வளவு நாள் காத்திருந்தது இதற்காகத் தான்!” என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement