• May 16 2026

உயிருக்குப் போராடும் முத்துவேல்.. துணையாக நிற்கும் கதிர்! டுடே எபிசொட்

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, டாக்டர் முத்துவேலோட உயிருக்கும் கொஞ்சம் ஆபத்து என்று சொன்னதைக் கேட்ட உடனே கதிர் ஷாக் ஆகுறார். மறுபக்கம் மீனா செந்தில் கிட்ட ஆபிஸில இருந்து அடுத்த வாரம் சென்னைக்கு ட்ரெயினிங் போட்டிருக்காங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட செந்தில் நானும் உன்கூடவே வாறதுக்கு Try பண்ணுறேன் என்கிறார்.

அதனை அடுத்து கதிர் முத்துவேல் கிட்ட போய் என்னாச்சு என்று கேட்கிறார். அதுக்கு முத்துவேல் எனக்கு ஒன்னும் இல்ல என்கிறார். பின் கதிர் நான் டாக்டர் கிட்ட பேசிட்டன் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு என்று அவர் சொல்லிட்டார் என்கிறார். மேலும், வீட்டில இருந்து யாரையாவது கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம் என்று கேட்கிறார்.


அதுக்கு, முத்துவேல் வீட்டில இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு அவங்க எல்லாரும் அழுகிறதுக்கா என்று சொல்லுறார். அப்புடியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள்.அதனை அடுத்து சரவணனும் பழனியும் டீ குடிச்சுக் கொண்டே கடை பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து அங்க மயில் வாறதைப் பார்த்த சரவணன் கோபப்படுறார்.

பின் மயில் பழனி கிட்ட போய் எப்புடி இருக்கீங்க என்று சொல்லி விசாரிக்கிறார். அதைப் பார்த்த சரவணன் பார்த்தியா மாமா ஏதோ நல்லவள் மாதிரி நலம் விசாரிச்சிட்டு போகிறாள் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து சரவணன் மயில் கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை பழனி கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட பழனி உண்மையா அந்தப் பிள்ளை கர்ப்பமாக இருக்கலாம் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement