• Apr 17 2026

பாக்ஸ் ஆபிஸில் பிரதீப் ரங்கநாதனின் 'LIK' எப்படி? முதல் நாள் வசூல் ரிப்போர்ட் இதோ.!

shali / 6 days ago

Advertisement

Listen News!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) திரைப்படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.


ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்புடன் நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த படம், முதல் நாளிலேயே கவனம் பெற்றுள்ளது. Sacnilk நிறுவனத்தின் தரவுகளின் படி, தமிழில் 6.32 கோடி ரூபாயும், தெலுங்கில் 1.61 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக 7.93 கோடி ரூபாய் முதல் நாள் வசூலாக கிடைத்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் தற்போது இளைஞர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற நடிகராக இருப்பதால், இந்த வசூல் அவரது சமீபத்திய வெற்றிகளுடன் ஒப்பிடும்போது சற்றே குறைவாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றால், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், ஆரம்பம் மெதுவாக இருந்தாலும், நல்ல மவுஸ் கிடைத்தால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல நிலையைப் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது எனக் கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement