• Apr 28 2025

விஜய் டிவி சீரியலில் இருந்து விலக உண்மையான ரீசன் இது தான்! பாண்டியன் ஸ்டோர் 2 நடிகை விளக்கம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் 2 தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் சரவணன் - தங்கமயில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இதன் கதைக்களம் விறுவிறுப்பாக நகர்கின்றது. 

ஆனாலும் பாண்டியன் எதிர்பார்த்தது போல தங்கமயிலின் குடும்பம் இல்லை. அவர்கள் அடாவடி பண்ணும் குடும்பமாகவும் தமது பிள்ளைக்கு பொய்யாக பேசி கட்டி வைக்கும் எண்ணத்திலேயே அவர்கள் பாண்டியன் குடும்பத்தோடு  நிச்சயதார்த்தம் செய்துள்ளார்கள்.

எனினும் இந்த சீரியலில் சரவணன் திருமணத்திற்கு முன்னர் தங்கமயில் பற்றிய உண்மைகள் வெளிவருமா அல்லது திருமணம் முடித்த பின்பு வெளிவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்த சீரியலில் நடித்த வந்த நடிகை ரிஹானா, அதாவது ராஜியின் சித்தியாக மாரி  கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை அண்மையில் விலகுவதாக அறிவித்திருந்தார். அவருக்கு பதிலாக இந்த சீரியலில் மாதவி தற்போது நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான இனியா தொடரில் நடித்து வந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் 2 வில் நடித்து வந்த ரிஹானா, இந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வந்துள்ளனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement