• Jun 14 2026

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க..! விஜய் வீட்டுக்கு என்ட்ரி கொடுத்த ஜோதிடர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. தற்போது கிடைத்துள்ள வாக்குகளின் படி விஜயின் கட்சி முன்னிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கியதுமே, நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிற்கு அவரது ஜோதிடரும், தமிழக வெற்றிக்கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான ஒருவர் பூங்கொத்துடன் வருகை தந்துள்ளார்.

காலை முதலே விஜயின் ரசிகர்கள், தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். இதன்போது அங்கு சிவப்பு நிற காரில் விஜயின் ஜோதிடர் வந்துள்ளார். தற்போது இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


ஏற்கனவே பலரும் இந்த தேர்தலில் விஜய் தான் முதல்வர் ஆவார் எனக் கூறி வரும் நிலையில், ஜோதிடர் பூங்கொத்துடன் விஜய் வீட்டிற்கு வந்தது பேசுபொருளாகியுள்ளது.

இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழகத்தின் ரசிகர் ஒருவர் விஜய் தேர்தலில் தோல்வியடைவார் என பயந்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. 

மேலும், விஜயின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement