விஜய் - திரிஷா ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து சிலர் திரிஷாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டபோது, திரிஷாவின் புகைப்படத்தை காட்டி கருத்து சொல்லுமாறு கேட்டனர். அதற்கு அவர் “குந்தவையை கொஞ்ச நாள் வீட்டுக்குள்ளேயே வைத்தால் பிரச்சினைகள் குறையும்” என நகைச்சுவையாக கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு நடிகை திரிஷா தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மைக்கில் பேசப்படும் வார்த்தைகள் புத்திசாலித்தனமாக மாறாது என்றும் மரியாதையற்ற கருத்துகள் பேசுபவரின் குணநலனையே காட்டும் என்றும் பதிவிட்டார்.

இந்நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் பார்த்திபன். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது இதில். வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை' என குறிப்பிட்டு குரல் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் விரைவாக பதில் அளிக்கும் சூழலில் வார்த்தை விளையாட்டாக அந்த கருத்து கூறப்பட்டதாகவும், அதை வெளியிட வேண்டாம் என ஏற்பாட்டாளர்களிடம் கேட்டிருந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Listen News!