• May 16 2026

ஆத்மார்த்தமான அன்பே எங்களை இணைத்திருக்கிறது.. லதா ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் வைரல்!

shali / 2 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் குறித்து அவரது மனைவி லதா தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமண வாழ்க்கை, அன்பு மற்றும் ஒற்றுமை குறித்து அவர் கூறிய வார்த்தைகள் பல இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் பல தசாப்தங்களாக ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்து வருகிறார். அவருடைய சினிமா பயணம் மட்டுமின்றி, குடும்ப வாழ்க்கையும் பலருக்கு ஒரு முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் பகிர்ந்துள்ள கருத்து தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அவர் அதன்போது, “ஒவ்வொருவரின் வாழ்க்கையும், சூழலும் வித்தியாசமானது. கஷ்டப்படுபவர்களுக்காக நாம் வேண்டிக் கொள்ள வேண்டும். ஒற்றுமையா வாழ்பவர்களைப் பார்த்து சந்தோசப்பட வேண்டும். இரண்டு மனங்களுக்கு இடையே இருக்கும் ஆத்மார்த்தமான அன்பு தான் எங்களை இவ்வளவு காலம் பிணைத்து வைத்திருக்கிறது.” என்று ரஜினி பற்றிக் கூறியுள்ளார். 

இந்த கருத்து திருமண வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement