• Aug 08 2025

" thugh life " படத்தில் முத்தமழை பாடல் இல்லை..! ரசிகர்கள் ஆதங்கம்..! மணிரத்னம் விளக்கம்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா ,அசோக்செல்வன் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய "thugh life " திரைப்படம் கலவனான விமர்சனத்தை பெற்று வருகின்றது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறுவதாக படக்குழு அறிவித்திருந்தது.


இதைவிட படத்தில் பாடகி தீ பாடிய "முத்தமழை " பாடலை இசைவெளியீட்டு விழாவில் சின்மயி பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் பல ரசிகர்கள் இயக்குநருக்கு சின்மயின் பாடலை படத்தில் சேர்க்குமாறு கூறியிருந்தனர். தற்போது இரண்டு பாடல்களுமே படத்தில் இடம்பெறவில்லை என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.


இந்த நிலையில் இது குறித்து மணிரத்னம் நேர்காணல் ஒன்றில் " முதல் மாதிரி இல்லை தற்போது பாடல்களை கேட்பதற்கு யூடியூப் போன்ற பல தளங்கள் வந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் இப்போது பலர் தியேட்டருக்கு பாடல் கேட்க வருவதில்லை படத்தின் கதையை மாத்திரமே பார்க்கின்றனர். அதைவிட எல்லா பாடல்களும் படத்தில் இடம்பெற வேண்டும் என அவசியம் இல்லை அது சில சமயங்களில் கதைக்கு பொருந்தாமல் இருக்கலாம் சில சமயங்களில் background மியூசிக் ஆக கூட வந்திருக்கலாம்" என மழுப்பலாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement