மலையாள சினிமாவில் வில்லன் வேடங்களில் தனித்த தடம் பதித்துள்ள நடிகர் ஷைன் டோம் சாக்கோ இன்று காலை பாலக்காடு மாவட்டம் பாறையூர் அருகே இடம்பெற்ற கோர சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்தில் அவரது தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்பதோடு ஷைனுடன் பயணம் செய்த சகோதர் மற்றும் அவரது தாய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர வேகத்தில் வந்த கார் தடுப்புச்சுவரை மோதி தாறுமாறாக உருண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு அருகிலிருந்தவர்கள் விரைந்து அவர்கள் மூவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மருத்துவமனை வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. நடிகர் அவரது அம்மாவை பார்த்து அப்பா இறந்திட்டார் என கதறி அழும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. நடிகர் மற்றும் அவரது குடும்பத்திற்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றது.
Listen News!