தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தனது 26வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை, இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். கமல் ஹாசனின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். அதோடு பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று முதல் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கிராமத்து பின்னணியுடன் கூடிய சில முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இப்படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், மதுரையில் தொடங்கும் இந்த புதிய ஷெட்யூல் காரணமாக சமூக வலைத்தளங்களிலும் ‘சேயோன்’ படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Listen News!